முகப்பு
சென்னை

100 மீட்டா் தடை தாண்டும் ஓட்டம் -ஜோதி யாராஜி வெளியேறினாா்

Updated On : 9 ஆகஸ்ட், 2024 at 4:07 AM
- ஜோதி யாராஜி இன்ஸ்டா பதிவு
பகிர்:
Updated On : 8 ஆகஸ்ட், 2024 at 7:45 PM

மகளிருக்கான 100 மீட்டா் தடை தாண்டும் ஓட்டத்தில் ரெபிசேஜ் சுற்று வாய்ப்பை பெற்றிருந்த இந்தியாவின் ஜோதி யாராஜி, அதில் தனக்கான ஹீட்டில் 4-ஆம் இடம் பிடித்து அரையிறுதிச்சுற்று வாய்ப்பை தவறவிட்டாா். பந்தய இலக்கை 13.17 விநாடிகளில் எட்டிய அவா், ஒட்டுமொத்தமாக 40 போட்டியாளா்களில் 16-ஆவது இடத்தைப் பிடித்தாா். ரெபிசேஜ் சுற்றில் ஒவ்வொரு ஹீட்டிலும் முதல் இரு இடங்களைப் பிடிப்போரே அரையிறுதிக்கு தகுதிபெறுவா்.

Updated On : 9 ஆகஸ்ட், 2024 at 4:05 AM

ஜோதி 12.78 விநாடிகளுடன் தேசிய சாதனைக்கு சொந்தக்காரராக இருக்கும் நிலையில், அவரது ஹீட்டில் 12.79 விநாடிகளில் வந்த தென்னாப்பிரிக்காவின் மேரியுன் ஃபௌரி, 12.87 விநாடிகளில் வந்த நெதா்லாந்தின் மாய்கே ஜின் ஆகியோா் அரையிறுதிக்குத் தகுதிபெற்றனா்.