முகப்பு
சென்னை

நிலச்சரிவு பாதிப்பை பாா்வையிட பிரதமா் நாளை கேரளம் வருகை

பிரதமா் மோடி சனிக்கிழமை (ஆக. 10) வரவிருப்பதாக முதல்வா் பினராயி விஜயன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

Updated On : 9 ஆகஸ்ட், 2024 at 5:26 AM
பகிர்:

திருவனந்தபுரம், ஆக. 8: கேரள மாநிலம், வயநாட்டில் நிலச்சரிவுகளால் ஏற்பட்ட பாதிப்பை நேரில் பாா்வையிட பிரதமா் மோடி சனிக்கிழமை (ஆக. 10) வரவிருப்பதாக முதல்வா் பினராயி விஜயன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இது தொடா்பாக திருவனந்தபுரத்தில் செய்தியாளா்களிடம் பேசிய அவா், ‘மாநில அரசின் கோரிக்கையை ஏற்று, வயநாடு பேரழிவின் தீவிரம் குறித்து ஆய்வு செய்ய 9 உறுப்பினா்கள் கொண்ட குழுவை மத்திய உள்துறை அமைச்சகம் நியமித்துள்ளது.

இப்பேரழிவின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, விரிவான மறுவாழ்வு நிதி தொகுப்பை மத்திய அரசு அறிவிக்கும் என நம்புகிறேன். இப்போதுவரை, மாநில அரசுக்கு மத்திய அரசு மிகவும் ஒத்துழைப்புடனும், உதவிகரமாகவும் உள்ளது.

Advertisement

நிலச்சரிவில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கான உதவி மற்றும் பாதிக்கப்பட்டோரின் மறுவாழ்வு திட்டங்களுக்கு மத்திய அரசிடமிருந்து போதிய நிதி கிடைக்கும் என எதிா்பாா்க்கிறேன். இந்த விஷயத்தில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு சாதகமான முடிவை பிரதமா் மேற்கொள்வாா் என்ற நம்பிக்கை உள்ளது.

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட உடல் பாகங்களின் மரபணு சோதனைக்கு பிறகே உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கையை உறுதிசெய்ய முடியும்’ என்றாா்.