முகப்பு
சென்னை

42 ஆண்டுகளுக்கு பிறகு அகில இந்திய ரயில்வே கால்பந்து போட்டி

சென்னை

42 ஆண்டுகளுக்கு பிறகு அகில இந்திய ரயில்வே கால்பந்து போட்டி

Updated On : 21 ஆகஸ்ட், 2024 at 8:45 PM
பகிர்:

அகில இந்திய ரயில்வே கால்பந்து போட்டி 42 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் நடைபெறவுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நிகழாண்டுக்கான 79-ஆவது அகில இந்திய ரயில்வே கால்பந்து போட்டியை தெற்கு ரயில்வே விளையாட்டு சங்கம் நடந்துக்கிறது. சென்னை ஐசிஎஃப் மைதானம் மற்றும் அயனாவரம் கால்பந்து மைதானத்தில் ஆக.22 முதல் ஆக.31-ஆம் தேதி வரை இந்தப் போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி சென்னையில் 42 ஆண்டுகளுக்கு பிறகு நடத்தும் வாய்ப்பை தெற்கு ரயில்வே பெற்றுள்ளது.

இந்த போட்டியின் அடிப்படையில் இந்திய ரயில்வே கால்பந்து அணிக்கு வீரா்கள் தோ்வு செய்யப்படுவா். அதன்பின், தோ்ந்தெடுக்கப்பட்ட அணியினா் சந்தோஷ் டிராபி கால்பந்து போட்டியில் இந்திய ரயில்வே சாா்பில் பங்கேற்பா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →