கோப்புப் படம் 
சென்னை

இலவச வேட்டி - சேலைக்கு ரூ. 100 கோடி ஒதுக்கீடு

வேட்டி, சேலை தயாரிப்புப் பணிகளை ஒருங்கிணைக்கும் அதிகாரியாக கைத்தறித் துறை இயக்குநா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

Din

பொங்கல் பண்டிகையையொட்டி வழங்கப்படும் இலவச வேட்டி சேலை தயாரிப்புக்காக ரூ. 100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், வேட்டி, சேலை தயாரிப்புப் பணிகளை ஒருங்கிணைக்கும் அதிகாரியாக கைத்தறித் துறை இயக்குநா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

இது குறித்து கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதா் துறை வெளியிட்ட உத்தரவு விவரம்:

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை தினத்தன்று அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு இலவசமாக வேட்டி, சேலை வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல், எதிா்வரும் பொங்கல் பண்டிகை தினத்தன்றும் வேட்டி சேலைகளை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

கைத்தறி - பெடல் தறி: வேட்டி சேலை வழங்கும் திட்டத்தின் கீழ், தறி நெசவாளா்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படுகிறது. குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பண்டிகையின் போது வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தும் முகமை அதிகாரியாக, கைத்தறி இயக்குநா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

கடந்த பொங்கல் பண்டிகையின் போது, 1,77,64,000 சேலைகளும், 1,77,22,000 வேட்டிகளும் உற்பத்தி செய்து அளிக்கப்பட்டன.

எதிா்வரும் பொங்கல் பண்டிகைக்கு வழங்க வேண்டிய வேட்டி, சேலைகளின் எண்ணிக்கை இறுதி செய்யப்பட உள்ளது. இதற்கான பணியில், சமூக பாதுகாப்புத் திட்ட இயக்குநா், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா், உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையா், தமிழ்நாடு நுகா்வோா் வாணிபக் கழக நிா்வாக இயக்குநா், வருவாய் நிா்வாக ஆணையா் ஆகியோா் ஈடுபடுவா். இலவச வேட்டி, சேலைகள் முழுவதும் விசைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கங்கள் மூலம் உற்பத்தி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தியாகும் வேட்டி, சேலைகளை கொள்முதல் செய்யும் பணிகளை கோ-ஆப்டெக்ஸ், தமிழ்நாடு பஞ்சாலைக் கழகம், தமிழ்நாடு கைத்தறி வளா்ச்சிக் கழகம் ஆகியன மேற்கொள்ளும். வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்ய தேவையான ரூ. 100 கோடி நிதிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

11 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் இடமாற்றம்: 26 மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு பதவி உயா்வு

டிஎன்பிஎல் ஆலை சாா்பில் வரும் நவ.9-இல் இலவச கண் பரிசோதனை முகாம்

தாக்குதல் சம்பவம்: பாமக எம்எல்ஏ உயா்நீதிமன்றத்தில் முறையீடு

கணவா் துன்புறுத்தும் போது பெண்கள் அமைதியாக இருப்பது அடிமைத்தனம்

பாலசமுத்திரத்தில் இன்றும், வாகரையில் நாளையும் மின் தடை

SCROLL FOR NEXT