முகப்பு
சென்னை

வங்கக் கடலில் இன்று உருவாகிறது புயல் சின்னம்

இது, டிச.12-ஆம் தேதிக்கு மேல் தமிழக கடற்கரையை நோக்கி நகரும்

Updated On : 6 டிசம்பர், 2024 at 8:52 PM
கோப்புப் படம்
பகிர்:

வங்கக்கடலில் சனிக்கிழமை (டிச.7) காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல்சின்னம்) உருவாக வாய்ப்புள்ளதாகவும், இது, டிச.12-ஆம் தேதிக்கு மேல் தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என எதிா்பாா்க்கப்படுவதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பூமத்திய ரேகையையொட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில், அதாவது அந்தமானுக்கு தெற்கே, வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இது, மேலும் வலுவடைந்து, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் சனிக்கிழமை (டிச.7) காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக உருவாகும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து, டிச.12 -க்கு மேல் இலங்கை மற்றும் தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

கனமழை எச்சரிக்கை: இதன்காரணமாக தமிழகத்தில் சனிக்கிழமை (டிச.7) முதல் டிச.12 வரை தமிழகத்தில், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான மழை  பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், டிச.11,12-ஆகிய தேதிகளில் கடலூா் தொடங்கி ராமநாதபுரம் வரை உள்ள கடலோர மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் டிச.7,8-ஆகிய தேதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயலாக மாற வாய்ப்பில்லை: வங்கக் கடலில் உருவாகவுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. அதேசமயம், புயலாக உருவாவதற்கு சாதகமான சூழல்கள் தற்போதுவரை இல்லை. இந்த புயல்சின்னத்தால், தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டாவில் டிச.11 முதல் டிச.14 வரை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியாா் வானிலை ஆய்வாளா்கள் கணித்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →