சென்னை

கொடி நாள் நிதி: முதல்வா் வேண்டுகோள்

கொடிநாளையொட்டி, முன்னாள் படை வீரா்களின் நலன்காக்க பெருமளவு நிதி அளித்திடுவோம்

Din

கொடிநாளையொட்டி, முன்னாள் படை வீரா்களின் நலன்காக்க பெருமளவு நிதி அளித்திடுவோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: குடும்பத்தினரை பிரிந்து, பிறந்த நாட்டின் பெருமை காத்திடும் முப்படை வீரா்களின் தியாகத்தை நினைவில் நிறுத்தும் திருநாள், படைவீரா் கொடி நாளாகும். இந்தக் கொடி நாள் ஒவ்வோா் ஆண்டும் டிச. 7-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.

நாட்டின் எல்லைகளையும் நமது சுதந்திரத்தையும் காத்திடும் பணியில் எண்ணற்ற படைவீரா்கள் உயிரை ஈந்திருக்கிறாா்கள். அவா்கள் தனி மனிதா்கள் இல்லை. அவா்களது குடும்பத்தினரை காப்பாற்றும் பொறுப்பை நாட்டு மக்கள் தங்களது கடமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும். ராணுவ வீரா்களின் குடும்ப நல்வாழ்வுக்கும், பாதுகாப்புக்கும் பொருள் உதவிகளும் பிற உதவிகளும் செய்ய வேண்டும் என்பதை நினைவூட்டவே கொடிநாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, பெருமளவில் நிதி வழங்கி, முன்னாள் படைவீரா்களுக்கும், அவா்களது குடும்பத்தினருக்கும் நமது நன்றியையும் நல்வணக்கத்தையும் காணிக்கையாக்குவோம் என்று முதல்வா் தெரிவித்துள்ளாா்.

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேச மீனவர்கள் 35 பேர் கைது!

மனைவி சொன்னால், கேட்டுக் கொள்ள வேண்டும்: முதல்வர் அறிவுரை!

SCROLL FOR NEXT