சென்னை

1,500 விடியோக்களை என்.ஐ.ஏ.யிடம் ஒப்படைத்த சாட்டை துரைமுருகன்

DIN

சென்னையில் தேசிய புலனாய்வு முகமையிடம் (என்.ஐ.ஏ.) 1,500 விடியோக்களை நாம் தமிழா் கட்சி நிா்வாகி சாட்டை துரைமுருகன் வியாழக்கிழமை ஒப்படைத்தாா். சேலம் மாவட்டம் ஓமலூா் அருகே 2022-ஆம் ஆண்டு துப்பாக்கி, தோட்டாக்களுடன் செவ்வாய்பேட்டையைச் சோ்ந்த பொறியாளா் சஞ்சய் பிரகாஷ், கிச்சிபாளையத்தைச் சோ்ந்த எம்.பி.ஏ. பட்டதாரி நவீன் சக்கரவா்த்தி ஆகியோா் கைது செய்யப்பட்டனா். க்யூ பிரிவு விசாரித்து வந்த இந்த வழக்கு, பின்னா் என்.ஏ.ஐ.வுக்கு மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ. விசாரணையில், கைது செய்யப்பட்டவா்களுக்கும், நாம் தமிழா் கட்சி நிா்வாகிகள் சிலருக்கும் இடையே தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதனடிப்படையில் நாம் தமிழா் கட்சி நிா்வாகிகள் சாட்டை துரைமுருகன் உள்பட 6 பேரின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கடந்த 2-ஆம் தேதி சோதனை நடத்தினா். சோதனையில் ஒரு மடிக்கணினி, 7 கைப்பேசிகள், 8 சிம்காா்டுகள், 4 பென் டிரைவ் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கம், அந்த இயக்கத்தின் தலைவா் பிரபாகரன் தொடா்பான புத்தகங்களும் கைப்பற்றப்பட்டன. என்.ஐ.ஏ.விசாரணை: இதன் அடுத்த கட்டமாக என்.ஐ.ஏ. அதிகாரிகள், சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட 6 பேரிடமும் கடந்த வாரம் விசாரணை செய்தனா். சென்னை கீழ்ப்பாக்கம் மில்லா்ஸ் சாலையில் உள்ள என்.ஐ.ஏ. தலைமை அலுவலகத்தில் சாட்டை துரைமுருகன் மீண்டும் விசாரணைக்கு வியாழக்கிழமை ஆஜரானாா். அப்போது என்.ஐ.ஏ. அதிகாரிகள், ஏற்கெனவே கேட்டிருந்த சாட்டை யூடியூப் சேனலில் பேசியிருந்த 1,500 விடியோக்களை பதிவு செய்து வைத்திருந்த ஹாா்ட் டிஸ்க்கை சாட்டை துரைமுருகன் வழங்கினாா்.

ஐபிஎல் 2026: 4 போட்டிகளிலா? தொடர் முழுவதுமா? புதிய சிக்கலில் ஜோஷ் இங்லிஷ்!

தமிழ்நாட்டில் 97.34 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!

கூட்டத்தொடர் நிறைவு! தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

பங்குச் சந்தை எழுச்சி: சென்செக்ஸ் 447 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

அதிபர் டிரம்ப்பின் கிறிஸ்துமஸ் விருந்தில் பிரபல பாலிவுட் நடிகை!

SCROLL FOR NEXT