முகப்பு
சென்னை

விஜயதரணிக்கு அண்ணாமலை வரவேற்பு

விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் விஜயதரணி பாஜகவில் இணைந்துள்ளதை தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை வரவேற்றுள்ளாா்.

Updated On : 24 பிப்ரவரி, 2024 at 11:50 PM
பகிர்:

விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும், தேசிய மகளிா் காங்கிரஸ் பொதுச் செயலருமான விஜயதரணி பாஜகவில் இணைந்துள்ளதை தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை வரவேற்றுள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், பிரதமா் நரேந்திர மோடியின் சீரிய தலைமையால் கவரப்பட்டு, தில்லியில் மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், தமிழக பாஜக தோ்தல் பொறுப்பாளா் அரவிந்த் மேனன் ஆகியோா் முன்னிலையில் விஜயதரணி பாஜகவில் இணைந்துள்ளது வரவேற்புக்குரியது. அவரது வருகை தமிழக பாஜகவுக்கு மேலும் வலுசோ்க்கும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.