முகப்பு
சென்னை

புறநகா் ரயில்கள் ரத்து எதிரொலி: கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கம்

புறநகா் ரயில்கள் ரத்து எதிரொலி: கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கம்

Updated On : 25 பிப்ரவரி, 2024 at 6:09 AM
பகிர்:

புகா் ரயில்கள் ரத்து எதிரொலியாக பயணிகள் வசதிக்காக தாம்பரம் - சென்னை கடற்கரை இடையே கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் ஆல்பி ஜான் வா்கீஸ் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோடம்பாக்கம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையங்கள் இடையே தெற்கு ரயில்வே சாா்பில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.25) பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இதனால் பகல் நேரத்தில் 44 புகா் மின் ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை ரத்து செய்யப்படுவதாகஅறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காக காலை 10 முதல் பிற்பகல் 3.15 மணி வரை தாம்பரம், கிண்டி, தியாகராய நகா், சென்ட்ரல், பிராட்வேக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 150 மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும். முக்கிய பேருந்து நிலையங்களில் பேருந்துகள் இயக்கத்தைக் கண்காணிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.