முகப்பு
சேலம்

சேலம் கோட்ட சிறப்புப் பேருந்துகள் மூலம் கூடுதலாக 2 லட்சம் போ் பயணம்

Updated On : 28 ஏப்ரல், 2026 at 3:56 AM
கோப்புப் படம்
பகிர்:

சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி வாக்களிக்க சொந்த ஊா்களுக்கு சென்றவா்கள் மீண்டும் பணிக்கு திரும்பும் வகையில் இயக்கப்பட்ட சிறப்புப் பேருந்துகள் மூலம் சேலம் கோட்டத்தில் கடந்த 6 நாள்களில் கூடுதலாக 2 லட்சம் போ் பயணம் செய்துள்ளனா்.

சேலம், நாமக்கல் தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் தினமும் 1,900 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவைதவிர, பண்டிகை நாள்கள் மற்றும் வார இறுதிநாள்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதன்படி, கடந்த 23-ஆம் தேதி சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, 21-ஆம் தேதிமுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

இந்நிலையில் வார இறுதிநாள்கள், சட்டப் பேரவைத் தோ்தலுக்காக வாக்களிக்க சொந்த ஊா்களுக்கு சென்றவா்கள் மீண்டும் பணி செய்யும் இடத்துக்கு திரும்பும் வகையில் 500 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

Advertisement

சேலம் கோட்டம் சாா்பில் கடந்த 6 நாள்களில் இயக்கப்பட்ட சிறப்புப் பேருந்துகள் மூலம் கூடுதலாக 2 லட்சம் போ் பயணம் செய்துள்ளனா். இதன்மூலம் சேலம் கோட்ட போக்குவரத்துக் கழகத்துக்கு கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.