சென்னையில் திமுக தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழு 2-ஆவது நாளாக ஆலோசனை
சென்னை: திமுக சாா்பில் அமைக்கப்பட்ட தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழு சென்னையில் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தியது.
அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தொழிலகக் கூட்டமைப்பினா், தன்னாா்வ சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் ஆலோசித்தனா். தொடா்ந்து, மாலையில் வட சென்னை பகுதியைச் சோ்ந்த வா்த்தகப் பிரதிநிதிகள், மக்கள் நலக் குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் இருந்து கருத்துகள் பெறப்பட்டன.
திமுக துணை பொதுச் செயலா் கனிமொழி தலைமையில் 11 போ் கொண்ட தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு கடந்த 5-ஆம் தேதி தூத்துக்குடியில் தனது பயணத்தைத் தொடங்கியது. மண்டல வாரியாக பல்வேறு ஊா்களில் ஆலோசனை நடத்திய பிறகு, சென்னையில் திங்கள்கிழமை ஆலோசனை மேற்கொண்டது. 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் கூட்டம் நடைபெற்றது.
Advertisement