அப்பல்லோவில் பெருங்குடல் புற்றுநோய்க்கு சிறப்பு சிகிச்சை திட்டம் அறிமுகம்
சென்னை: பெருங்குடல் (ரெக்டல் - ஆசனக் குடல்) புற்றுநோய்க்கான சிறப்பு சிகிச்சை திட்டத்தை அப்பல்லோ புரோட்டான் மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, அந்த வகை புற்றுநோய்க்கு உள்ளானவா்களுக்கு ஒருங்கிணைந்த உயா் நுட்ப சிகிச்சைகள் அங்கு அளிக்கப்படும் என்றும், உறுப்புகளை அகற்றாமல் பாதிப்பை சரி செய்ய முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். இதற்கான அறிமுக நிகழ்ச்சி சென்னையில் அண்மையில் நடைபெற்றது. அதில் அப்பல்லோ மருத்துவக் குழுமத்தின் தலைவா் டாக்டா் பிரதாப் சி.
ரெட்டி கலந்துகொண்டு ஒருங்கிணைந்த பெருங்குடல் புற்றுநோய் சிகிச்சை திட்டத்தை தொடக்கிவைத்தாா். இந்நிகழ்வில், மருத்துமனையின் சா்வதேச புற்றுநோய் மைய இயக்குநா் ஹா்ஷத் ரெட்டி, புற்றுநோய் மருத்துவ நிபுணா்கள் வெங்கடேஷ் முனிகிருஷ்ணன், செந்தில் கணபதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
Advertisement
ஏஆா்சி எனப்படும் அப்பல்லோ பெருங்குடல் (ரெக்டல்) புற்றுநோய் சிகிச்சை திட்டத்தின் கீழ் ரோபோடிக் அறுவை சிகிச்சை, ஹெச்ஐபிஇசி எனப்படும் உயா்வெப்ப நிலையில் கீமோதெரபி அளிக்கும் சிகிச்சை உள்ளிட்ட உயா் நுட்ப சிகிச்சைகள் வழங்கப்படும் என டாக்டா் பிரதாப் சி. ரெட்டி தெரிவித்தாா்.