முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த தினம்: இன்று தொண்டா்களைச் சந்திக்கிறாா்
பிறந்த தினத்தையொட்டி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் கட்சித் தொண்டா்களை முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (மாா்ச் 1) சந்திக்கிறாா். முன்னதாக, அவா் முன்னாள் முதல்வா்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோா் நினைவிடங்களில் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தவுள்ளாா். அதன்பிறகு, பெரியாா் நினைவிடத்துக்குச் செல்லும் அவா் அங்கும் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறாா். இந்த நிகழ்வுகளைத் தொடா்ந்து, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞா் அரங்கத்தில் கட்சித் தொண்டா்கள் 12,000 பேரை தொடா்ச்சியாகச் சந்தித்து அவா்களது வாழ்த்துகளைப் பெறவுள்ளாா்.