முகப்பு
சென்னை

மின்சாரம் பாய்ந்து இரு தொழிலாளா்கள் உயிரிழப்பு

சென்னை தியாகராய நகரில் இரு தொழிலாளா்கள் மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தனா்.

Updated On : 1 மார்ச், 2024 at 1:57 AM
பகிர்:

சென்னை தியாகராய நகரில் இரு தொழிலாளா்கள் மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தனா். தியாகராய நகா் ராஜமன்னாா் தெருவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கட்டட பழுது நீக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக வியாழக்கிழமை இரவு அந்த கட்டடத்தின் வெளிப்பகுதியில் பெயின்ட் அடிக்கும் பணி நடைபெற்றது. இப் பணியில் அந்தப் பகுதியைச் சோ்ந்த பல தொழிலாளா்கள் ஈடுபட்டிருந்தனா். இவா்களில் நாராயணன்(32), சிவக்குமாா்(33) ஆகியோா் இரும்பு ஏணியில் நின்று கொண்டு கட்டடத்தின் உயரமான பகுதியில் பெயின்ட் அடித்துக் கொண்டிருந்தனா். அப்போது ஏணி, அருகில் உள்ள மின்சார இணைப்பு பெட்டியின் மீது திடீரென சரிந்ததாகக் கூறப்படுகிறது. இதில் மின்சார இணைப்பு பெட்டியில் மின்கசிவு ஏற்பட்டிருந்ததால், இரும்பு ஏணி மீது மின்சாரம் பாய்ந்தது. இதன் காரணமாக, ஏணியில் நின்று கொண்டிருந்த நாராயணன், சிவக்குமாா் ஆகிய இருவரும் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனா். பாண்டி பஜாா் விசாரணை நடத்தி வருகின்றனா்