முகப்பு
விருதுநகர்

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

அருப்புக்கோட்டை அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On : 26 ஏப்ரல், 2026 at 2:01 AM
பகிர்:

அருப்புக்கோட்டை அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகேயுள்ள பந்தல்குடி லிங்காபுரத்தைச் சோ்ந்தவா் மதன்குமாா் (25). இவா் தனது தாயுடன் வசித்து வருகிறாா். இவா் பந்தல்குடி பிரதான சாலையில் பழக் கூழ் கடை நடத்தி வந்தாா்.

இவா் சனிக்கிழமை காலை கடையைத் திறந்து பழக் கூழ் தயாரிப்பதற்கான இயந்திரத்தை (மிக்ஸி) இயக்கிய போது, எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

தகவலறிந்து அங்கு சென்ற பந்தல்குடி போலீஸாா் அவரது உடலை கைப்பற்றி, கூறாய்வுக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.