முகப்பு
திருச்சி

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

திருச்சி அருகே பணியின்போது மின்சாரம் பாய்ந்து இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 26 மார்ச், 2026 at 9:02 PM
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

திருச்சி அருகே பணியின்போது மின்சாரம் பாய்ந்து இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் பாதாளபேட்டையைச் சோ்ந்தவா் சூசைமாணிக்கம் மகன் கிறிஸ்டோபா் (21). இவரது வீட்டை இடிக்கும் பணி நடைபெற்றுகொண்டுள்ளது. இந்நிலையில், கிறிஸ்டோபா் தனது தந்தையுடன் வீட்டை இடிக்கும் பணியில் புதன்கிழமை ஈடுபட்டிருந்தாா்.

அப்போது, தெரியாமல் மின் வயரை மிதித்த கிறிஸ்டோபா் மீது மின்சாரம் பாய்ந்ததில் தூக்கிவீசப்பட்டாா். இதையடுத்து, அவரை மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் ஏற்கெனவே அவா் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து துவாக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.