முகப்பு
விழுப்புரம்

மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தாா்.

Updated On : 26 மார்ச், 2026 at 12:16 AM
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தாா்.

விக்கிரவாண்டி வட்டம், வி.நெற்குணம் சிவன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் சங்கா். இவரது மனைவி அனுசுயா(45). இவா்கள் இருவரும் அதே பகுதியைச் சோ்ந்த மோகன் என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் உள்ள மின் மோட்டாா் அருகே கீரைகள் பறித்துக் கொண்டிருந்தனராம். அப்போது அங்கு அறுந்து கிடந்த மின்சார வயரை அனுசுயா மிதித்ததில், மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டாா். இதையடுத்து அவரை 108 அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கைக் கொண்டு சென்றனா். ஆயினும் வழியிலேயே அனுசுயா உயிரிழந்தாா்.

இதுகுறித்து கண்டமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.