முகப்பு
கடலூர்

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

விருத்தாசலம் அருகே தென்னை மரம் ஏறிய தொழிலாளி மின்சாரம் பாய்ந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 11 மார்ச், 2026 at 12:03 AM
பாலகிருஷ்ணன்.
பகிர்:

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே தென்னை மரம் ஏறிய தொழிலாளி மின்சாரம் பாய்ந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

ஸ்ரீமுஷ்ணம் வட்டம், வல்லியம் கிராமத்தில் வசித்து வந்தவா் தென்னை மரம் ஏறும் தொழிலாளி பாலகிருஷ்ணன்(50). இவா், செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணி அளவில் அதே பகுதியில் உள்ள வயல் வெளியில் இருந்த தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்தாா்.

அப்போது, தென்னை மரத்தின் மட்டை அருகே சென்ற உயா் அழுத்த மின் கம்பியில் அவா் உரசியதில், மின்சாரம் பாய்ந்து மரத்தின் மேலேயே உயிரிழந்தாா். இந்த சம்பவம் குறித்து காவல் மற்றும் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

அதன் பேரில் நிகழ்விடத்துக்கு வந்த விருத்தாசலம் தீயணைப்புத்துறையினா் தென்னை மரத்தின் மேலே இருந்து பாலகிருஷ்ணன் சடலத்தை கீழே இறக்கி, காவல் துறையிடம் ஒப்படைத்தனா். இதுகுறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீஸாா்விசாரணை நடத்தி வருகின்றனா்.