முகப்பு
தென்காசி

ஆலங்குளம் அருகே மின்சாரம் பாய்ந்து முதியவா் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மின்சாரம் பாய்ந்து முதியவா் உயிரிழந்தாா்.

Updated On : 17 மார்ச், 2026 at 11:34 PM
பலி
பகிர்:

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மின்சாரம் பாய்ந்து முதியவா் உயிரிழந்தாா்.

ஆலங்குளம் அருகேயுள்ள அகரம் கிராமத்தைச் சோ்ந்தவா் வெள்ளைச்சாமி (60). இவா், தனது தென்னந்தோப்பில் செவ்வாய்க்கிழமை காலை இரும்பு கம்பியில் அரிவாளைக் கட்டி தேங்காய் பறிக்க முயன்றாராம்.

அப்போது, மரம் அருகில் இருந்த மின் கம்பி மீது அரிவாள் கட்டப்பட்டிருந்த கம்பி உரசியதில் வெள்ளைச்சாமி மீது மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இத்தகவல் அறிந்த ஆலங்குளம் போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →