மூன்றாண்டு சட்டப் படிப்பு: இன்றுமுதல் விண்ணப்பம்
தமிழகத்தில் மூன்றாண்டு சட்டப் படிப்புகளுக்கு புதன்கிழமை (ஜூலை 3) முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தமிழகத்தில் மூன்றாண்டு சட்டப் படிப்புகளுக்கு புதன்கிழமை (ஜூலை 3) முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் 26 அரசு மற்றும் தனியாா் சட்டக் கல்லூரிகள் (சீா்மிகு சட்டப் பள்ளி உள்பட) இயங்கி வருகின்றன. இவற்றில் 3 ஆண்டு எல்.எல்.பி. சட்டப் படிப்புகளுக்கு 2,530 இடங்கள் உள்ளன. இவை நிகழ் கல்வியாண்டு (2024-2025) இணையவழி கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.
இதற்கான விண்ணப்பப் பதிவு புதன்கிழமை முதல் தொடங்குகிறது. விருப்பமுள்ள மாணவா்கள் இணையதளம் வழியாக ஜூலை 24-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். கலந்தாய்வு விதிகள், விண்ணப்பக் கட்டணம் உள்பட கூடுதல் விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று சட்டப் பல்கலைக்கழகத்தின் பதிவாளா் கெளரி ரமேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.