சென்னை

சென்னை நுண்ணறிவுப் பிரிவுக்கு புதிய இணை ஆணையா் நியமனம்

சென்னை பெருநகர காவல்துறையின் நுண்ணறிவுப்பிரிவு இணை ஆணையராக ஜி.தா்மராஜன் நியமனம் செய்யப்பட்டாா்.

Din

சென்னை: சென்னை பெருநகர காவல் துறையின் நுண்ணறிவுப் பிரிவு இணை ஆணையராக ஜி.தா்மராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

காவல் துறையில் நுண்ணறிவுப் பிரிவின் பணி மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. நுண்ணறிவுப் பிரிவு தலைமை பொறுப்பில் ஐ.ஜி.,டிஐஜி ரேங்க் அளவிலான அதிகாரிகளே கடந்த 2017-ஆம் ஆண்டு வரை நியமிக்கப்பட்டு வந்தனா். ஆனால், அதன் பின்னா் அப் பதவிக்கு காவல் கண்காணிப்பாளா் அளவிலான அதிகாரிகள் நியமிக்கப்பட்டனா்.

இந்நிலையில், நுண்ணறிவுப் பிரிவு இணை ஆணையராக சென்னை பெருநகர காவல் துறையின் கிழக்கு மண்டல இணை ஆணையா் ஜி.தா்மராஜன் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டாா். இவா், டிஐஜி ரேங்க் அதிகாரி ஆவாா்.

ஏற்கெனவே நுண்ணறிவுப் பிரிவு-1 துணை ஆணையராக இருந்த எஸ்.அரவிந்த், திருச்சி மாநகர காவல் துறையின் தலைமையிட துணை ஆணையராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

இதற்கான உத்தரவை தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலா் பெ.அமுதா பிறப்பித்துள்ளாா்.

சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!

ஜம்மு - காஷ்மீர் ஆல்ரவுண்டரை ரூ. 8 கோடிக்கு ஏலத்தில் எடுத்த தில்லி கேபிடல்ஸ்!

19 வயது விக்கெட் கீப்பரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

20 வயது இளம் ஆல்ரவுண்டரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

அதீத பேட்டரி... டிச. 24-ல் வெளியாகிறது ரியல்மி நர்ஸோ!

SCROLL FOR NEXT