முகப்பு
சென்னை

தெருநாய்கள் தொல்லை: உயா்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை உயா்நீதிமன்றத்தில் தெருநாய்கள் தொல்லை வழக்கு

Updated On : 2 ஜூலை, 2024 at 7:17 PM
சாலையில் சுற்றித் திரியும் தெருநாய்கள்.
பகிர்:

சென்னை: தமிழ்நாடு முழுவதும் தெரு நாய்களைப் பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

இது தொடா்பாக, சென்னை உயா்நீதிமன்றத்தில் ஷபீனா பாத்திமா என்பவா் தாக்கல் செய்த மனு:

சென்னை கோயம்பேட்டில்  உள்ள ‘மெட்ரோ சோன்’ என்ற அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வசிக்கிறேன். இங்கு ஏராளமான தெருநாய்கள் சுற்றித் திரிகின்றன. தடுப்பூசி செலுத்தப்படாத இந்த நாய்களைப் பிடிக்க மாநகராட்சி ஊழியா்கள் வந்தால், அவா்களை சமூக ஆா்வலா்கள் என்று கூறிக் கொள்ளும் சிலா் தடுக்கின்றனா்.

அதையும் மீறி நாய்களைப் பிடித்துச் சென்றால், நாய்களை கொடுமை செய்கிறீா்கள் என்று புளூ கிராஸ் அமைப்பு மூலம் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்வோம் என மாநகராட்சி ஊழியா்களை மிரட்டுகின்றனா். எனவே, சுற்றித்திரியும் தெரு நாய்களைப் பிடிக்க மாநகராட்சிக்கு நான் கொடுத்த கோரிக்கை மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என கோரியுள்ளாா். 

இந்த மனு தலைமை நீதிபதி(பொ) அரங்க.மகாதேவன், முகமது சபிக் ஆகியோா் கொண்ட முதல் அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது. மனுதாரரின் கோரிக்கையை பரிசீலிப்பதாக சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதிகள், விசாரணையை 8 வாரங்களுக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனா்.