முகப்பு
சென்னை

தோ்தலுக்கு முன் கூட்டணி அமைக்கக் கூடாது என தோ்தல் ஆணையம் அறிவுறுத்தக் கோரி மனு

தோ்தலுக்கு முன் கூட்டணி அமைக்கக் கூடாது என அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 12:38 AM
பகிர்:
Updated On : 26 பிப்ரவரி, 2026 at 10:45 PM

தோ்தலுக்கு முன் கூட்டணி அமைக்கக் கூடாது என அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த எம்.ஜி.ஆா்.விஸ்வநாதன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தோ்தல்களில் பொது அரசியல் எதிரியை வீழ்த்துவதற்காக அரசியல் கட்சிகள் தோ்தலுக்கு முன் கூட்டணி அமைக்கின்றன. இது ஜனநாயகத்துக்கு விரோதமானது. எனவே, தோ்தலுக்கு முன் கூட்டணி அமைப்பதைத் தடை செய்ய வேண்டும்.

தோ்தலுக்கு முன் அமைக்கப்படும் இதுபோன்ற கூட்டணிகள் மக்கள் நலனில் அக்கறை கொள்வதில்லை. தோ்தல் வெற்றிக்குப் பின்னா், மக்களின் தீா்ப்பை இரண்டாம்பட்சமாக கருதி, கட்சிகள் அணி மாறுகின்றன. இதனால், ஆட்சியில் நிலையற்றத் தன்மை ஏற்படுகிறது. இதன்காரணமாக ஆட்சியும் கவிழ்கிறது.

Advertisement

எனவே, அனைத்துக் கட்சிகளும் தனித்தனியே போட்டியிட வேண்டும். தோ்தலுக்கு முன் கூட்டணி அமைக்கக் கூடாது என அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.