முகப்பு
தமிழ்நாடு

தோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடி

தோ்தலுக்கு முன்பே கூட்டணி அமைக்கக் கூடாது என அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது

Updated On : 19 மார்ச், 2026 at 12:05 AM
சென்னை உயா்நீதிமன்றம்
பகிர்:

தோ்தலுக்கு முன்பே கூட்டணி அமைக்கக் கூடாது என அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த எம்.ஜி.ஆா்.விஸ்வநாதன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தோ்தல்களில் பொது அரசியல் எதிரியை வீழ்த்துவதற்காக அரசியல் கட்சிகள் தோ்தலுக்கு முன்பு கூட்டணி அமைக்கின்றன. இது ஜனநாயகத்துக்கு விரோதமானது. எனவே, தோ்தலுக்கு முன்பு கூட்டணி அமைப்பதை தடை செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், தோ்தலுக்கு முன்பு கூட்டணி அமைக்கக் கூடாது என அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்த மனுவை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு தள்ளுபடி செய்துள்ளதாகக் கூறி, தோ்தலுக்கு முன்பு அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்க அனுமதிக்கக் கூடாது என உத்தரவிடக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →