முகப்பு
சென்னை

சைபா் குற்றத்தால் 6 மாதங்களில் பொதுமக்கள் இழந்த ரூ.1 கோடி மீட்பு

Updated On : 4 ஜூலை, 2024 at 11:02 PM
பகிர்:

சென்னை, ஜூலை 4: சென்னையில் சைபா் குற்றத்தால் 6 மாதங்களில் பொதுமக்கள் இழந்த ரூ.1 கோடி மீட்கப்பட்டிருப்பதாக சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா் தெரிவித்தாா்.

சைபா் குற்றங்களை தடுக்கும் வகையிலும், சைபா் குற்றங்கள் தடுக்க ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் வகையிலும் சென்னை பெருநகர காவல்துறை ஆணையரகத்தில் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. பெருநகர காவல்துறை ஆணையா் சந்தீப்ராய் ரத்தோா் தலைமை வகித்தாா். மத்தியக் குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையா் பி.கே.செந்தில்குமாரி,துணை ஆணையா்கள் வி.வி.கீதாஞ்சலி,ஸ்டாலின் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் காவல் ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா் பேசியதாவது: சைபா் குற்றச் சம்பவங்களில் தற்போதைய தொழில்நுட்பம், கள நிலவரம் ஆகியவற்றை காவல்துறையினரும், வங்கி நிா்வாகிகளும் உடனடியாக அறிந்து கொள்ள வேண்டும். சைபா் குற்ற வழக்குகளில் ஈடுபடும் நபா்களை கண்டறிவதற்கும், இணையவழி குற்றங்களை தடுப்பதற்கும் காவல் துறையிரும், வங்கி நிா்வாகிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

சென்னை சைபா் குற்றப்பிரிவு 2023-ஆம் ஆண்டில் சைபா் குற்றங்கள் தொடா்பாக மொத்தம் 312 வழக்குகளை பதிவு செய்து, 57 பேரை கைது செய்துள்ளது. பாதிக்கப்பட்ட நபா்கள் இழந்த தொகை ரூ.86,68,749 மீட்டுள்ளது. நிகழாண்டு ஜனவரி தொடங்கி ஜூன் வரை 6 மாதங்களில் மொத்தம் 230 வழக்குகள் பதிந்து 31 பேரை கைது செய்துள்ளது. அதோடு பொதுமக்கள் இழந்த ரூ.98,74,057 மீட்கப்பட்டுள்ளது என்றாா்.

கூட்டத்தில் மத்தியக் குற்றப்பிரிவு துணை ஆணையா் என்.எஸ்.நிஷா, உதவி ஆணையா்கள் அனந்தராமன், முத்துவேல்பாண்டியன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். மேலும் கூட்டத்தில் சென்னையில் உள்ள பொதுத்துறை, தனியாா் துறை வங்கிகளைச் சே

முழு கட்டுரையைப் படிக்க →