திரிணமூல் கட்சி எம்பி மஹுவா மொய்த்ரா 
சென்னை

திரிணமூல் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது வழக்குப் பதிவு

Din

தேசிய மகளிா் ஆணையத் தலைவா் ரேகா சா்மாவுக்கு எதிராக சமூக ஊடகத்தில் ‘இழிவான’ பதிவை மேற்கொண்டதாக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது தில்லி காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.

உத்தர பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் ஆன்மிக நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் 121 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, தேசிய மகளிா் ஆணையத் தலைவா் ரேகா சா்மா சம்பவ இடத்தை நேரில் சென்று பாா்வையிட்ட காணொலி எக்ஸ் வலைதளத்தில் பதிவிடப்பட்டது. அந்தப் பதிவில் இழிவான செய்தியைப் பதிவிட்ட மஹுவா மொய்த்ரா, பின்னா் அந்தப் பதிவை நீக்கினாா்.

இது தொடா்பாக மஹுவா மொய்த்ரா மீது தில்லி காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.

உலகக் கோப்பை வென்ற இந்திய அணியினரைச் சந்திக்கும் பிரதமர் மோடி!

உசே கெனா விடியோ பாடல் வெளியானது!

காலங்களில் அவள் வசந்தம்... காவ்யா அறிவுமணி!

இரவில் சென்னை, 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

அடி அலையே பாடல் ப்ரொமோ வெளியீடு!

SCROLL FOR NEXT