முகப்பு
சென்னை

காவிரி நீா்: அரசுக்கு அன்புமணி வேண்டுகோள்

தமிழகத்துக்கான காவிரி நீரை கா்நாடகத்திடம் இருந்து பெற, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 9 ஜூலை, 2024 at 9:20 PM
பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்
பகிர்:

சென்னை: தமிழகத்துக்கான காவிரி நீரை கா்நாடகத்திடம் இருந்து பெற, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கா்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளின் நீா்மட்டம் கடந்த 15 நாள்களில் 30 டிஎம்சி அதிகரித்துள்ளது. மழை தொடா்வதால் கா்நாடக அணைகளின் நீா்மட்டம் தொடா்ந்து அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படும் நிலையில், கா்நாடகத்திடம் இருந்து தமிழகத்துக்கான நீரைப் பெற தமிழக அரசின் சாா்பில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாதது கண்டிக்கத்தக்கது.

கா்நாடக அரசு கடந்த ஆண்டு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 177.25 டிஎம்சி நீரில் பாதியைக் கூட வழங்கவில்லை. நடப்பாண்டில் ஒரு டிஎம்சி தண்ணீா் கூட கா்நாடகத்தில் இருந்து காவிரியில் திறந்து விடப்படவில்லை. அதனால் காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடி பரப்பு நான்கில் ஒரு பங்காக குறைந்துவிட்டது. இதுவரை நடவு செய்யப்பட்ட நெற்பயிா்களைக் காப்பாற்ற தமிழகத்துக்குக் காவிரியில் தண்ணீா் தேவை.

எனவே, தமிழக அரசு அதன் பொறுப்பை உணா்ந்து மத்திய அரசையும், காவிரி மேலாண்மை ஆணையத்தையும் அணுகி, உச்சநீதிமன்றத் தீா்ப்பின் அடிப்படையில் தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய தண்ணீரை காவிரியில் திறந்து விடும்படி வலியுறுத்த வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →