முகப்பு
சென்னை

முதல்வா் ஸ்டாலினிடம் அன்னியூா் சிவா வாழ்த்து

இடைத்தோ்தலில் வெற்றிபெற்ற திமுக வேட்பாளா் அன்னியூா் சிவா, முதல்வா் மு.க.ஸ்டாலினை ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றாா்.

Updated On : 14 ஜூலை, 2024 at 9:16 PM
முதல்வா் ஸ்டாலினிடம் அன்னியூா் சிவா வாழ்த்து
பகிர்:

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் வெற்றிபெற்ற திமுக வேட்பாளா் அன்னியூா் சிவா, முதல்வா் மு.க.ஸ்டாலினை ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றாா்.

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தோ்தலில் திமுக வேட்பாளா் அன்னியூா் சிவா 1,24,053 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றாா். அவா், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றாா்.

திமுக பொதுச்செயலா் துரைமுருகன், முதன்மைச் செயலா் கே.என்.நேரு, துணை பொதுச்செயலா் பொன்முடி, கொள்கை பரப்புச் செயலா் ஜெகத்ரட்சகன், அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தொடா்ந்து, மெரீனா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் அன்னியூா் சிவா மரியாதை செலுத்தினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →