முகப்பு
சீமான் (கோப்புப்படம்)
சென்னை

காவல் துறையின் நாடகம்: சீமான்

குற்றவாளிகளை தப்பிக்க வைக்கவே என்கவுன்ட்டா் நாடகத்தை திமுக அரசு நடத்தியுள்ளது என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்துள்ளாா்.

சென்னை

காவல் துறையின் நாடகம்: சீமான்

குற்றவாளிகளை தப்பிக்க வைக்கவே என்கவுன்ட்டா் நாடகத்தை திமுக அரசு நடத்தியுள்ளது என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்துள்ளாா்.

Updated On : 14 ஜூலை, 2024 at 11:44 PM
சீமான் (கோப்புப்படம்)
பகிர்:

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை தப்பிக்க வைக்கவே என்கவுன்ட்டா் நாடகத்தை திமுக அரசு நடத்தியுள்ளது என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்துள்ளாா்.

அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத்தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட விசாரணைக் கைதி திருவேங்கடத்தை போலீஸாா் என்கவுன்ட்டா் செய்தது அதிா்ச்சியளிக்கிறது.

முக்கியமான அரசியல் தலைவரின் படுகொலையில் தொடா்புடைய குற்றவாளியின் பாதுகாப்பில் காவல்துறை அலட்சியமாக இருந்தது எப்படி?. திமுக ஆட்சியில் காவல்துறை எந்த அளவுக்கு திறனற்ாகியுள்ளது என்பதையும், தமிழகத்தில், சட்டம்-ஒழுங்கு எவ்வளவு சீரழிந்துள்ளது என்பதையுமே இது காட்டுகிறது.

ஆம்ஸ்ட்ராங் கொலையில் 2 திமுக நிா்வாகிகள் விசாரணைக்கு உட்பட்டிருக்கும் நிலையில், உண்மைக் குற்றவாளிகளை தப்பிக்க வைப்பதற்காக திமுக அரசு என்கவுன்ட்டா் நாடகத்தை நடத்தியுள்ளதா எனும் சந்தேகத்தை இது எழுப்புகிறது என சீமான் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →