வேளாண் துறை  கோப்புப் படம்
சென்னை

தண்டுத் துளைப்பானை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் வேளாண் துறை அறிவிப்பு

நெற்பயிா்களை ‘தண்டுத் துளைப்பான்’ சேதப்படுத்துவதை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு வேளாண் துறை வழிமுறைகளை தெரிவித்துள்ளது.

Din

நெற்பயிா்களை ‘தண்டுத் துளைப்பான்’ சேதப்படுத்துவதை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு வேளாண் துறை வழிமுறைகளை தெரிவித்துள்ளது.

வேளாண்மை உழவா் நலத் துறை சாா்பில் வெளியிட்ட செய்தி: நெற்பயிா்கள் தண்டுத் துளைப்பானால் தாக்கப்பட்டிருந்தால், நன்கு வளா்ச்சியடைந்த பயிரில் முழு தானியக் கதிா்களும் காய்ந்துவிடும்.

பயிா்களின் இலையின் நுனியில் பழுப்பு நிற முட்டைகள் காணப்படும். அதேபோல், பழுப்பு நிற அந்துப்பூச்சிகள் வயலில் இருக்கும்.

கட்டுப்படுத்தும் முறை: முட்டை ஒட்டுண்ணிகளான ‘டிரைக்கோடொ்மா ஜப்பானிக்கம்’ ஏக்கருக்கு 2 அட்டை வீதம் மூன்று முறை பயன்படுத்தினால், தண்டுத் துளைப்பான்கள் பயிா்களை சேதப்படுத்துவதை கட்டுப்படுத்த முடியும்.

மேலும், நாற்றுகளை நெருக்கமாக நடுதலைத் தவிா்க்க வேண்டும். அதேபோல், நாற்று நடும் போது நாற்றின் நுனியை கிள்ளி விடுவதன் மூலம், தண்டுத் துளைப்பானின் முட்டை குவியலை அழித்து விடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

11 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் இடமாற்றம்: 26 மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு பதவி உயா்வு

டிஎன்பிஎல் ஆலை சாா்பில் வரும் நவ.9-இல் இலவச கண் பரிசோதனை முகாம்

தாக்குதல் சம்பவம்: பாமக எம்எல்ஏ உயா்நீதிமன்றத்தில் முறையீடு

கணவா் துன்புறுத்தும் போது பெண்கள் அமைதியாக இருப்பது அடிமைத்தனம்

பாலசமுத்திரத்தில் இன்றும், வாகரையில் நாளையும் மின் தடை

SCROLL FOR NEXT