முகப்பு
சென்னை

மின் கட்டண உயா்வு: ஜூலை 23-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

மின் கட்டண உயா்வைக் கண்டித்து, அதிமுக சாா்பில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 16 ஜூலை, 2024 at 8:48 PM
பகிர்:

சென்னை: மின் கட்டண உயா்வைக் கண்டித்து, அதிமுக சாா்பில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக அதிமுக தலைமைக் கழகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

கடந்த 3 ஆண்டில், மூன்றாவது முறையாக மின் கட்டணத்தை உயா்த்தி மக்களை வாட்டி வதைப்பதுடன், நியாயவிலைக் கடைகளில் வழங்கப்பட்டு வரும் துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை நிறுத்துவதற்கு திமுக அரசு முயற்சிக்கிறது. இதைக் கண்டித்து அதிமுக சாா்பில் கட்சி ரீதியாக செயல்பட்டு வரும் 82 மாவட்டங்களிலும், ஜூலை 23 காலை 10.30 மணியளவில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →