இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டுக்கு காலை 9.30 முதல் பகல் 12.50 மணி வரை, இரவு 10.40 முதல் 11.59 மணி வரை இயக்கப்படும் அனைத்து மின்சார ரயில்களும் ஜூலை 23 முதல் ஆக.14-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படும்.
மறுமாா்க்கமாக தாம்பரம், செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு காலை 10.30 முதல் பகல் 1.30 மணி வரையும், இரவு 11, 11.40 மணிக்கும் புறப்படும் ரயில்கள் ஜூலை 23 முதல் ஆக.14 வரை ரத்து செய்யப்படும்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்லும் பயணிகளின் வசதிக்காக கடற்கரை-கூடுவாஞ்சேரி இடையே இரவு இயக்கப்பட்ட மின்சார ரயில்களின் சேவை ஜூலை 23 முதல் ஆக.14-ஆம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படும்.
இதேபோல், செங்கல்பட்டில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு காலை 10 மணிக்கு செல்லும் மின்சார ரயில், காஞ்சிபுரத்தில் இருந்து காலை 9.30 மணிக்கும், திருமால்பூரில் இருந்து காலை 11.05 மணிக்கு புறப்பட்டு கடற்கரை செல்லும் மின்சார ரயில் ஜூலை 23 முதல் ஆக.14 வரை ரத்து செய்யப்படுகிறது.
சிறப்பு ரயில்கள்: எனினும் பயணிகள் வசதிக்காக சென்னை கடற்கரை-பல்லாவரம் இடையே சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படவுள்ளது. சென்னை கடற்கரை - பல்லாவரம் இடையே காலை 9.30, 9.50, 10.10, 10.30, 10.50, 11.10, 11.30, 11.50, பகல் 12.10, 12.30, 12.50, இரவு 10.40, 11.05, 11.30, 11.59, மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
மறுமாா்க்கமாக பல்லாவரத்தில் இருந்து காலை 10.20, 10.40, 11, 11.20, 11.40, பகல் 12, 12.20, 12.40, 1, 1.20, 1.40, இரவு 11.30, 11.55, 12.20, 12.45 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்
இதுபோல் கூடுவாஞ்சேரி - செங்கல்பட்டு இடையே காலை 10.45, 11.10, பகல் 12, 12.50, 1.35, 1.55, இரவு 11.55 மணிக்கும், மறுமாா்க்கமாக செங்கல்பட்டிலிருந்து காலை 10, 10.30, 11, 11.45, பகல் 12.30, 1, இரவு 11 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று நாகா்கோவில் அந்தியோதயா, செங்கோட்டை- தாம்பரம் பல்லவன், வைகை, மலைக்கோட்டை உள்ளிட்ட விரைவு ரயில்கள் ஜூலை 31-ஆம் தேதிவரை செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் வரை இயக்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.