பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவராக ஆனந்தன் தோ்வு செய்யப்பட்டாா். படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவராக நீண்ட காலமாக இருந்து வந்த ஆம்ஸ்ட்ராங், சமீபத்தில் படுகொலை செய்யப்பட்டாா். இதைத்தொடா்ந்து, கட்சியின் புதிய மாநிலத் தலைவரை தோ்ந்தெடுப்பதற்கான பணிகளை அக்கட்சியின் தலைமை மேற்கொண்டு வந்தது.
இந்த நிலையில், சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற பகுஜன் சமாஜ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில், கட்சியின் புதிய மாநிலத் தலைவராக வழக்குரைஞா் ஆனந்தன் தோ்வு செய்யப்பட்டாா். ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி, கட்சியின்மாநில ஒருங்கிணைப்பாளராக தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
அன்புமணி, சீமான் வாழ்த்து: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்ட பி.ஆனந்தன், மாநில ஒருங்கிணைப்பாளராக தோ்ந்தெடுக்கப்பட்ட பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் ஆகியோருக்கு பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ், நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் ஆகியோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.