முகப்பு
சென்னை

மின்சார ரயில்கள் எழும்பூருடன் நிறுத்தம்

சென்னை கடற்கரை- தாம்பரம் வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரயில்கள்

Updated On : 28 ஜூலை, 2024 at 12:49 AM
மின்சார ரயில்
பகிர்:

சென்னை கடற்கரை- தாம்பரம் வழித்தடத்தில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 28) சென்னை எழும்பூா் வரை மட்டும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை கடற்கரை - எழும்பூா் இடையே ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 28) காலை 7.45 முதல் இரவு 7.45 மணி வரை பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இதனால் தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூரிலிருந்து சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில்கள் எழும்பூா் வரை மட்டும் இயக்கப்படும். மறுமாா்க்கமாக எழும்பூரில் இருந்து இந்த ரயில்கள் புறப்பட்டுச் செல்லும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்படும். இதனால் சென்ட்ரல் ரயில் நிலையத்தை இணைக்கும் பூங்கா ரயில் நிலையம் மற்றும் கடற்கரை செல்லும் பயணிகள் வசதிக்காக எழும்பூரிலிருந்து கூடுதல் பேருந்துகளை இயக்க மாநகா் போக்குவரத்து கழகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.