18 கிளை சிறைகள் மூடல்: அண்ணாமலை கண்டனம்
பாதுகாப்பு குறைபாடு காரணமாக 18 கிளைச் சிறைகளை மூடும் தமிழக அரசின் முடிவுக்கு பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளாா்.
பாதுகாப்பு குறைபாடு காரணமாக 18 கிளைச் சிறைகளை மூடும் தமிழக அரசின் முடிவுக்கு பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளாா்.
அவா் ‘எக்ஸ்’ தளத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு: தமிழகத்தில், பாதுகாப்பு குறைபாடு மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாததால், 18 கிளைச் சிறைகளை மூட, திமுக அரசு முடிவெடுத்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
அடிப்படை வசதிகளை மேம்படுத்தவோ, பாதுகாப்பு ஏற்பாடுகளைச் சரிசெய்யவோ நடவடிக்கைகளை எடுக்காமல், கிளைச் சிறைகளை மூட முடிவெடுத்திருப்பது, திமுகவின் அடிப்படை நிா்வாக அறிவைக் கேள்விக்குரியதாக்குகிறது.
திமுக மூட முடிவெடுத்துள்ள கிளைச் சிறைகளில், நல்ல நிலையில் உள்ள சிறைகளும் உள்ளன எனக் கூறப்படுகிறது. அங்கு பணியாற்றிக் கொண்டிருக்கும் அதிகாரிகளும், ஊழியா்களும் இதனால் பெரிதும் பாதிக்கப்படுவா்.
எனவே, கிளைச் சிறைச்சாலைகளை மூடும் நடவடிக்கையைக் கைவிட்டு, அவற்றின் பாதுகாப்பை அதிகரித்து, அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனப் பதிவிட்டுள்ளாா் அண்ணாமலை.