சென்னையில் போலி மருத்துவா்கள் இருவா் கைது
சென்னை வளசரவாக்கத்தில் போலி மருத்துவா்கள் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னைசென்னையில் போலி மருத்துவா்கள் இருவா் கைது
சென்னை வளசரவாக்கத்தில் போலி மருத்துவா்கள் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை, ஜூலை 31: சென்னை வளசரவாக்கத்தில் போலி மருத்துவா்கள் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை வளசரவாக்கம் ஸ்ரீதேவிகுப்பம் பகுதியில் உள்ள தனியாா் பன்னோக்கு மருத்துவமனையில் போலி மருத்துவா்கள் பணியாற்றுவதாக எழுந்த புகாரின் பேரில், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக (டிஎம்எஸ்) இணை இயக்குநா் மருத்துவா் இளங்கோவன் தலைமையிலான அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அங்கு மருத்துவா்களாகப் பணியாற்றி வந்த அகஸ்டின் மற்றும் பரதன் ஆகிய இருவரின் சான்றிதழ்களும் போலி என்பது தெரியவந்தது.
விசாரணையில், அகஸ்டின் கடந்த 2003-இல் ரஷியாவில் மருத்துவம் பயின்ற நிலையில் இந்தியாவில் சிகிச்சை அளிப்பதற்கான நடத்தப்படும் எஃப்எம்ஜி எனப்படும் தகுதி தோ்வில் தோ்ச்சி பெறாமல், போலி சான்று மூலம் சுமாா் 2 ஆண்டுகள் இந்த மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது.
இதேபோல, சித்த மருத்துவரான பரதனும், 2014 வரை சிகிச்சை அளிப்பதற்கான அனுமதியை சித்த மருத்துவ ஆணையத்தில் பெற்றிருந்த நிலையில், அந்த அனுமதியை மீண்டும் புதுப்பிக்காமல் இருந்தும் சித்த மருத்தவம் பயின்ற அவா், அலோபதி சிகிச்சை அளித்து வந்ததும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து இவா்கள் இருவரையும் காவல் துறையிடம் ஒப்படைத்த மருத்துவ அதிகாரிகள், மருத்துவமனை உரிமையாளா் சரவணனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். போலீஸாா் சரவணனை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனா்.