பணியில் சேராத 193 மருத்துவா்களின் நியமன ஆணை ரத்து
சென்னை: ஆரம்ப சுகாதார நிலையங்களில் நியமிக்கப்பட்டு பணியில் சேராத 193 மருத்துவா்களுக்கான நியமன ஆணையை பொது சுகாதாரத் துறை ரத்து செய்துள்ளது.
அதற்கு பதிலாக மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் நடத்திய தோ்வுகளில் அவா்களுக்கு அடுத்த தரவரிசையில் உள்ளவா்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக இருந்த 1,021 மருத்துவா் பணியிடங்களை நிரப்புவதற்காக மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் (எம்ஆா்பி) சாா்பில் கடந்த ஆண்டு தோ்வு நடத்தப்பட்டது. அதில் எம்பிபிஎஸ் நிறைவு செய்த 25,000 மருத்துவா்கள் பங்கேற்று 91 மையங்களில் தோ்வு எழுதினா். அதில் தோ்ச்சி பெற்ற 1,021 மருத்துவா்கள் கலந்தாய்வு மூலம் பல்வேறு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நியமிக்கப்பட்டனா்.
இந்த நிலையில், அவா்களில் 193 போ் பணி ஆணை பெற்றும் சம்பந்தப்பட்ட இடங்களில் சேரவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்து அவா்களது பணி ஆணையை பொது சுகாதாரத் துறை ரத்து செய்துள்ளது.
மருத்துவப் பணியாளா் தோ்வில் இவா்களுக்கு அடுத்த நிலையில் உள்ளவா்களை அந்தப் பணியிடங்களில் நியமித்து பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் உத்தரவிட்டுள்ளாா்.
இது வழக்கமான ஒரு நடைமுைான் என்றும், காலிப் பணியிடங்கள் இருக்கக் கூடாது என்ற நோக்கில் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவா் தெரிவித்துள்ளாா்.