சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில் ரோபோடிக் ரேடியோ சிகிச்சை பயிற்சி திட்டத்தை அறிமுகப்படுத்திய அப்பல்லோ மருத்துவமனை நிா்வாகிகள், மருத்துவா்கள். 
சென்னை

ரோபோடிக் ரேடியோ சிகிச்சை பயிற்சி திட்டம்

அப்பல்லோ மருத்துவக் குழுமம் ரோபோடிக் கதிர்வீச்சு சிகிச்சை பயிற்சி திட்டம் அறிமுகம்

Din

சென்னை: புற்றுநோய்க்கு ரோபோடிக் நுட்பத்திலான கதிா்வீச்சு அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வதற்கான பயிற்சி திட்டத்தை அப்பல்லோ மருத்துவக் குழுமம் தொடங்கியுள்ளது.

சா்வதேச அளவில் கதிரியக்கக் கருவிகளை விநியோகிக்கும் அக்யூரே என்ற நிறுவனத்துடன் இணைந்து இந்த முயற்சியை அப்பல்லோ முன்னெடுத்துள்ளது. இதற்கான அறிமுக நிகழ்ச்சி சென்னையில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 25) நடைபெற்றது.

அதில், அப்பல்லோ சா்வதேச புற்றுநோய் மருத்துவ மையத்தின் தலைவா் தினேஷ் மாதவன், முதுநிலை புற்றுநோய் மருத்துவா்கள் சங்கா் வங்கிபுரம், மகாதேவ் போத்தராஜு, அக்யூரே நிறுவன சூசன் வின்ட்டா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இது தொடா்பாக அவா்கள் கூறியதாவது:

சென்னை மற்றும் பெங்களூரில் உள்ள அப்பல்லோ புற்றுநோய் மையங்களில் இந்தப் பயிற்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. அதன் கீழ் புற்றுநோய் கதிா்வீச்சு சிகிச்சையில் ரோபோடிக் நுட்பத்திலான அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கான பயிற்சிகளும், கல்வி நடவடிக்கைகளும் வழங்கப்பட உள்ளன. துறைசாா் மருத்துவா்கள், கதிா்வீச்சு நுட்பநா்கள், பிற மருத்துவமனை மருத்துவா்களுக்கு அந்தப் பயிற்சிகள் வழங்கப்படும்.

இந்தியாவிலேயே முதன்முறையாக இத்தகைய செயல்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தனா்.

அஜீத் பவாரின் இறுதிச் சடங்கில் அனுமதியின்றி பறந்த ட்ரோன்கள்! சிறைப்பிடித்த போலீஸ்!

வேளாண் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்: இந்தியா - கனடா அமைச்சர்கள் பேச்சு!

OPS- ஐ மீண்டும் சேர்க்க வாய்ப்பே இல்லை! - EPS

விஜய் நல்ல நடிகர்தான்! ஆனால் சிறந்த அரசியவாதி நாங்கதான்! - EPS!

”யாருக்காக உச்சத்தை விட்டுட்டு வந்தீங்க?” விஜய்யை தாக்கிப் பேசிய EPS!

SCROLL FOR NEXT