முகப்பு
சென்னை

செந்தில் பாலாஜி நீதிமன்றக் காவல் ஜூலை 1 வரை நீட்டிப்பு

செந்தில் பாலாஜி நீதிமன்றக் காவல் ஜூலை 1 வரை நீடிப்பு

Updated On : 25 ஜூன், 2024 at 9:52 PM
நீதிமன்றக் காவல் நீட்டிப்பு
பகிர்:

சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஜூலை 1-ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த 2023 ஜூன் 14-ஆம் தேதி முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டாா். அவரது ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றமும், சென்னை உயா்நீதிமன்றமும் தள்ளுபடி செய்துள்ளன.

தற்போது செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைந்தது.

இதைத் தொடா்ந்து அவா் புழல் சிறையிலிருந்து காணொலி மூலம் சென்னை முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பாக ஆஜா்படுத்தப்பட்டாா். அப்போது, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை, ஜூலை 1-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டாா்.

41-ஆவது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அமலாக்கத் துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனு மீதான உத்தரவை ஒத்திவைக்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுக்கள் மீதான விசாரணையையும் ஜூலை 1-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →