முகப்பு
தமிழ்நாடு

கரூர் பலி: செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் விசாரணை!

கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் தொடர்பாக செந்தில் பாலாஜியிடம் இன்றைய சிபிஐ விசாரணை நிறைவு பெற்றது தொடர்பாக...

Updated On : 18 மார்ச், 2026 at 2:55 AM
சிபிஐ அலுவலகத்தில் செந்தில் பாலாஜி - படம் - எக்ஸ்
பகிர்:

நமது நிருபர்

கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் தில்லியில் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை 6 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

கரூர் சம்பவம் குறித்து உச்சநீதிமன்ற உத்தரவின்படி, முன்னாள் நீதிபதி அஜய் ரஸதோகி தலைமையிலான குழு கண்காணிப்பில் கடந்த அக்டோபர் மாதம் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

Advertisement

கூட்ட நெரிசல் உயிரிழப்பு மற்றும் சம்பவத்தின்போது நேரில் இருந்தவர்கள் உள்பட 200க்கும் மேற்பட்டோரிடம் சிபிஐ அதிகாரிகள் கரூர், திருச்சி மற்றும் சென்னையில் விசாரணை நடத்தினர். தவெக பொதுச் செயலர் ஆனந்த், நிர்வாகிகள் ஆதவ் அர்ஜுனா, சி.டி.நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்ட தவெக செயலர் மதியழகன் மற்றும் கட்சியின் விஜய் உள்ளிட்டோரை தில்லிக்கு வரவழைத்தும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், அப்போதைய சட்டம் ஒழுங்கு பிரிவு காவல் டிஜிபி, திருச்சி சரக ஐ.ஜி உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கடந்த ஜன. 15, 18, 19 ஆகிய நாள்களிலும் மார்ச் 15-ஆம் தேதியும் விஜய் சிபிஐ அதிகாரிகள் முன் தில்லியில் ஆஜராகி அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

இந்நிலையில் கரூர் சம்பவம் தொடர்பாக செந்தில் பாலாஜி சிபிஐ தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை ஆஜராகி சாட்சியம் அளித்தார். கரூர் சம்பவம் நடந்த அடுத்த சில நிமிஷங்களில் செந்தில் பாலாஜி தனது ஆதரவாளர்களுடன் நிகழ்விடத்துக்கு வந்தது குறித்தும், பிறகு தவெக நிர்வாகிகள் செய்த ஏற்பாடுகள் தொடர்பாக செந்தில் பாலாஜி பொதுவெளியில் சுமத்திய குற்றச்சாட்டுகள் குறித்தும் அவர் மீது தவெக நிர்வாகிகள் முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் செந்தில்பாலாஜியிடம் அதிகாரிகள் கேள்களை கேட்டதாகத் தெரிகிறது.

ஆறு மணி நேர விசாரணை முடிவில் மீண்டும் விசாரணைக்கு அழைத்தால் ஒத்துழைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு செந்தில் பாலாஜி அனுப்பி வைக்கப்பட்டதாக சிபிஐ தலைமையக வட்டாரங்கள் தெரிவித்தன.

summary

Senthil Balaji was questioned for 6 hours in CBI delhi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.