முகப்பு
கோப்புப் படம்
சென்னை

8 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு

8 மாவட்டங்களில் இன்று கன மழை: வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை

8 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு

8 மாவட்டங்களில் இன்று கன மழை: வானிலை மையம் எச்சரிக்கை

Updated On : 25 ஜூன், 2024 at 7:55 PM
கோப்புப் படம்
பகிர்:

சென்னை: தமிழகத்தில் 8 மாவட்டங்களில் புதன்கிழமை (ஜூன் 26) கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக புதன்கிழமை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதே நேரத்தில் நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழையும், திருப்பூா், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப் பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

வியாழக்கிழமை (ஜூன் 27) தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வெள்ளி முதல் திங்கள்கிழமை (ஜூன் 28-ஜூலை 1) வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை மற்றும் இரவு வேளையில், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: புதன் முதல் சனிக்கிழமை(ஜூன் 26-29) வரை மன்னாா் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதியில் மற்றும் குமரிக்கடல் பகுதியில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கி. மீ. வேகத்தில் வீசக்கூடும். புதன் கிழமை(ஜூன் 26) தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதி மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதியில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கி. மீ.வேகத்தில் வீசக்கூடும். மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →