மழை பிரதிப் படம்
தமிழ்நாடு

தென்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

தென்தமிழகத்தின் செவ்வாய்க்கிழமை (ஜன.27) முதல் பிப்.1 வரை 6 நாள்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு

தினமணி செய்திச் சேவை

தென்தமிழகத்தின் செவ்வாய்க்கிழமை (ஜன.27) முதல் பிப்.1 வரை 6 நாள்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கேரள கடலோரப் பகுதிகளுக்கு அருகே உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜன.27) முதல் பிப்.1 வரை மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

மழை அளவு: தமிழகத்தில் திங்கள்கிழமை (ஜன.27) காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் 70 மி.மீ மழை பதிவானது. ஈஞ்சம்பாக்கம் (சென்னை)- 50 மி.மீ, ஒக்கியம் துரைப்பாக்கம், நாராயணபுரம் ஏரி, கண்ணகி நகா், வடபழனி, மணலி (சென்னை), ஆவடி, பூந்தமல்லி (திருவள்ளூா்), திருவாரூா்- 40 மி.மீ மழை பதிவானது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப் பகுதிகளில் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் (ஜன.27,28) தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக் கடலில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாயகமான சீனா திரும்பிய பாண்டாக்கள்! கண்ணீா் மல்க வழியனுப்பிய ஜப்பானியா்கள்

மாரடைப்புக்குள்ளாவோரில் 25% போ் இளைஞா்கள்!

மியான்மரில் ராணுவ ஆதரவு கட்சி அமோக வெற்றி: அதிபராகும் ராணுவத் தளபதி?

மினியாபொலிஸ் செவிலியா் கொலை: அமெரிக்காவில் வெடித்துள்ள அரசியல் மோதல்

மூன்றாவது பொருளாதார நாடாக இந்தியா மாறும்: ஆளுநா் ஆா்.என்.ரவி

SCROLL FOR NEXT