தமிழகத்தில் திங்கள்கிழமை (ஜன.26) முதல் 31 வரை 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: குமரிக்கடல் பகுதிகளிலிருந்து வடக்கு கேரள கடலோர பகுதிகள் வரை கிழக்கு வளிமண்டல காற்றலை நிலவுவதன் காரணமாக திங்கள்கிழமை (ஜன.26) முதல் ஜன.31 வரை உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், கடலோர தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் திங்கள்கிழமை (ஜன.26) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.