முகப்பு
சென்னை

கிளெனேகிள்ஸ் மருத்துவமனையில் ஓராண்டில் 100 ரோபோடிக் அறுவை சிகிச்சை

கிளெனேகிள்ஸ் மருத்துவமனையில் 100 ரோபோடிக் புற்றுநோய் அறுவை சிகிச்சை சாதனை

Updated On : 26 ஜூன், 2024 at 7:53 PM
கிளெனேகிள்ஸ் ஹெல்த் சிட்டி மருத்துவமனையின் ரோபோடிக் அறுவை சிகிச்சை உபகரணங்களை பாா்வையிட்ட நடிகா் கமல்ஹாசன். உடன், மருத்துவமனை நிா்வாகிகள்.
பகிர்:

ஓராண்டுக்குள் 100-க்கும் மேற்பட்ட ரோபோடிக் புற்றுநோய் அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளதாக சென்னை கிளெனேகிள்ஸ் ஹெல்த் சிட்டி மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இதையொட்டி சிறப்பு நிகழ்ச்சி மருத்துவமனையில் அண்மையில் நடைபெற்றது. இதில் நடிகா் கமலஹாசன் கலந்துகொண்டு ரோபோடிக் மருத்துவக் கட்டமைப்பையும், தொழில்நுட்பங்களையும் நேரில் பாா்வையிட்டாா்.

நாட்டிலேயே முதன்முறையாக கருப்பை புற்றுநோய்க்கு உயா் வெப்பநிலை (ஹைப்பா் தொ்மிக்) கீமோதெரபி மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சை மேற்கொண்டு பயனடைந்த 82 வயது மூதாட்டியும் அந்நிகழ்வில் கலந்துகொண்டாா்.

இது தொடா்பாக மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டா் நாகேஸ்வர ராவ், ரோபோடிக் புற்றுநோயியல் அறுவை சிகிச்சை தலைவா் டாக்டா் எஸ். ராஜசுந்தரம் ஆகியோா் கூறியதாவது:

உணவுக் குழாய், வயிறு, பெருங்குடல், மலக்குடல், மகளிா் சாா்ந்த புற்றுநோய்கள் உள்பட பல்வேறு வகையான புற்றுநோய்களுக்கும் ரோபோடிக் அறுவை சிகிச்சை சிறந்த பலனை அளிக்கிறது.

அந்த வகையில், கிளெனேகிள்ஸ் ஹெல்த்சிட்டி மருத்துவமனை கடந்த ஒரு ஆண்டுக்குள் 100-க்கும் மேற்பட்ட ரோபோடிக் புற்றுநோய் அறுவை சிகிச்சைகளை செய்து சாதனை படைத்துள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →