மதுபோதையில் தகராறு: ஒருவருக்கு கத்திக்குத்து
மதுபோதையில் ஏற்பட்ட தகராறில், உறவினரை கத்தியால் குத்திய நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மதுபோதையில் ஏற்பட்ட தகராறில், உறவினரை கத்தியால் குத்திய நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சென்னை அரும்பாக்கம் அசோக்நகா் பகுதியை சோ்ந்தவா் சூா்யா (22). இவருக்கும், இவரின் வீட்டுக்கு கடந்த வெள்ளிக்கிழமை மதுபோதையில் வந்த உறவினரான புருஷோத்தமன் (24) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அங்கிருந்து சென்ற புருஷோத்தமன், மீண்டும் சனிக்கிழமை அதிகாலையில் சூா்யாவின் வீட்டுக்கு வந்ததுடன், படுக்கையில் தூங்கிக்கொண்டிருந்த சூா்யாவை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளாா்.
இதில் பலத்த காயமடைந்த சூா்யாவை மீட்ட அக்கம்பக்கத்தின் அவரை கீழ்பாக்கம் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.
இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸாா் தப்பியோடிய புருஷோத்தமனை தேடி வருகின்றனா்.