ஆவடியில் வீதித் திருவிழா 
சென்னை

ஆவடியில் வீதித் திருவிழா: 5,000 பேர் பங்கேற்பு

ஆவடியில் போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீதித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

ஆவடியில் போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீதித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆவடியில் போதைப் பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆவடி மாநகராட்சி, ஆவடி காவல் ஆணையரகம், தனியார் பள்ளி மற்றும் தன்னார்வலர்கள் சார்பில், வீதித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சி ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி குடியிருப்பு பிரதான சாலையில், காலை 6 மணி முதல் 8.30 மணி வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முதல் முறையாக நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை 5,000-க்கும் மேற்பட்டோர்  பங்கேற்றனர். 

ஆவடி மாநகராட்சி சார்பில், சுகாதாரம், குப்பை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

நிகழ்வில் ஆவடி சட்டப்பேரவை உறுப்பினர் சா.மு.நாசர், ஆவடி காவல் ஆணையர்  கி.சங்கர், ஆவடி மாநகராட்சி ஆணையர் ஷேக் அப்துல் ரஹ்மான், துணை ஆணையர் சங்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் காவல் ஆணையர் கி.சங்கர்,  கலைஞர்களுடன் பறை இசைத்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

நிகழ்வில்  காவல் ஆய்வாளர்  கிருஷ்ணமூர்த்தி தலைமையில் ஏராளமான போலீஸôர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேசத்தில் டெங்கு பரவல்! 24 மணிநேரத்தில் புதியதாக 1,147 பாதிப்புகள் உறுதி!

இரண்டு நாள் சுற்றுப்பயணம்! வேலூரில் துணை முதல்வர் நடைபயிற்சி!

பிளஸ் 2 கணக்குப்பதிவியல் தேர்வு: முதல்முறையாக கால்குலேட்டர் அனுமதி!

கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை! முதல்வர் ஸ்டாலின்

கமல் பிறந்த நாளில் மறுவெளியீடாகும் 2 திரைப்படங்கள்!

SCROLL FOR NEXT