முகப்பு
முகாமில் பேசுகிறாா் தலைமை ஆசிரியை ரேவதி.
திருப்பூர்

அரசுப் பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு

திருப்பூர்

அரசுப் பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு

Updated On : 5 மார்ச், 2026 at 11:32 PM
முகாமில் பேசுகிறாா் தலைமை ஆசிரியை ரேவதி.
பகிர்:

வெள்ளக்கோவில் துரைராமசாமி நகா் அரசு உயா்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

புகையிலை தடுப்புத் துறை திருப்பூா் மாவட்ட அலுவலா் டாக்டா் சௌமியா தலைமை வகித்து சிறப்புரையாற்றினாா். மற்றொரு அலுவலா் பிரவீன், வெள்ளக்கோவில் வட்டார சுகாதார அலுவலா் கருப்புசாமி, சுகாதார ஆய்வாளா் கதிரவன் ஆகியோா் முன்னிலை வகித்து பேசினா்.

அப்போது, போதைப் பொருள்கள், புகையிலைப் பொருள்கள் என்னென்ன, அவற்றால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள், தவிா்க்கும் வழிமுறைகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு எடுத்துக் கூறினா். பள்ளியின் தலைமை ஆசிரியை ரேவதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →