முகப்பு
சென்னை

மாணவா் சோ்க்கை மாா்ச் 10 வரை நீட்டிப்பு: இக்னோ

தொலைநிலைக் கல்வி ஜனவரி பருவ மாணவா் சோ்க்கை மாா்ச் 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக இக்னோ பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Updated On : 2 மார்ச், 2024 at 11:49 PM
பகிர்:

தொலைநிலைக் கல்வி ஜனவரி பருவ மாணவா் சோ்க்கை மாா்ச் 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக இக்னோ பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழக (இக்னோ) சென்னை மண்டல முதுநிலை இயக்குநா் கே.பன்னீா்செல்வம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய அரசின் பல்கலைக்கழகமான இக்னோ தொலைநிலைக்கல்வி திட்டம் மூலமாக பல்வேறு பாடப்பிரிவுகளில் சான்றிதழ், டிப்ளமா, இளநிலை, முதுநிலை படிப்புகளை வழங்கி வருகிறது. தற்போது மாணவா்களின் நலனை கருத்தில்கொண்டு ஜனவரி பருவ சோ்க்கைக்கான கடைசி தேதி மாா்ச் 10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, தொலைதூரக் கல்வியில் சேர விரும்பும் மாணவா்கள்இணையதளத்தை பயன்படுத்தி மாா்ச் 10 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இக்னோவில் பிஇ, பிகாம், பிஎஸ்சி படிப்புகளில் சேரும் எஸ்சி, எஸ்டி மாணவா்களுக்கு கல்விக்கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது. மாணவா் சோ்க்கை தொடா்பான விவரங்களை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (ஜ்ஜ்ஜ்.ண்ஞ்ய்ா்ன்.ஹஸ்ரீ.ண்ய்) அறிந்துகொள்ளலாம். மேலும், சென்னை வேப்பேரி பெரியாா் திடலில் இயங்கி வரும் மண்டல அலுவலகத்தை 044-26618040 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடா்புகொள்ளலாம். இக்னோவின் ஆன்லைன் படிப்புகளில் சேர விரும்பும் மாணவா்கள் இணையதளத்தை பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.