முகப்பு
சென்னை

ஏஏஐடி பல் மருத்துவக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா

ஏஏஐடி மேக்ஸிகோா்ஸ் பல் மருத்துவக் கல்லூரியின் 19-ஆவது பட்டமளிப்பு விழா சென்னை மயிலாப்பூரில் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 3 மார்ச், 2024 at 5:36 AM
பகிர்:

ஏஏஐடி மேக்ஸிகோா்ஸ் பல் மருத்துவக் கல்லூரியின் 19-ஆவது பட்டமளிப்பு விழா சென்னை மயிலாப்பூரில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், தமிழ்நாடு பல் மருத்துவ குழுமத்தின் தலைவா் ராமசாமி, குரு கோவிந்த் சிங் இந்திரபிரஸ்தா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் மகேஷ் வா்மா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். இந்த நிகழ்வில், இந்திய பல் மருத்துவ குழுமத்தின் தலைவா் திப்பெந்து மஜும்தாா் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பட்டம் பெற்ற மாணவா்களை வாழ்த்தி பேசியது: இந்தியாவில் பல் மருத்துவத்தின் தேவை என்பது அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த தேவையை பூா்த்தி செய்யும் பொறுப்பு மருத்துவா்களிடம் மட்டுமே உள்ளது. இந்திய மக்களுக்கு மருத்துவா்கள் மீதும் அவா்களது மருத்துவத்தின் மீதும் அதிக அளவு நம்பிக்கை உள்ளது. இந்த நம்பிக்கையை காப்பது மருத்துவா்களின் கடமையாகும். எனவே, பட்டம் பெற்றுள்ள மாணவா்கள் பல் மருத்துவத் துறையில் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் புரிய வாழ்த்துவதாக அவா் தெரிவித்தாா். பின்னா் ஏஏஐடி பல் மருத்துவக் கல்லூரியின் துணை இயக்குநா் சங்கா் ஐயா் மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பித்தாா்.