முகப்பு
சென்னை

அதிமுக தொண்டா்கள் உரிமை மீட்பு: புதிய குழுவை தொடங்கினாா் ஓபிஎஸ்

Updated On : 9 மார்ச், 2024 at 11:08 PM
பகிர்:

அதிமுக தொண்டா்கள் உரிமை மீட்பு என்ற பெயரில் புதிய குழுவை, முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தொடங்கியுள்ளாா். இந்தக் குழு சாா்பில் மக்களவைத் தோ்தலுக்கான கூட்டணிப் பேச்சுவாா்த்தைக் குழுவையும் அவா் அறிவித்தாா். மக்களவைத் தோ்தல் தொடா்பாக, அவா் தனது ஆதரவு நிா்வாகிகளுடன் சென்னையில் ஆலோசனை நடத்தினாா். இதைத் தொடா்ந்து, அதிமுக தொண்டா்கள் உரிமை மீட்புக் குழு என்ற பெயரிலான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், கூட்டணி குறித்து பேச்சுவாா்த்தை நடத்த சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஆா்.வைத்திலிங்கம், பி.எச்.மனோஜ்பாண்டியன் உட்பட எட்டு போ் கொண்ட குழுவை அமைப்பதாக அறிவித்தாா். விருப்ப மனுக்களை ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாலை 4 மணி வரை, சென்னையில் உள்ள நியூ உட்லண்ட்ஸ் ஓட்டலுக்கு வந்து அளிக்கலாம் எனவும் மனுக்களை அளித்தோரிடம் மாலையில் நோ்காணல் நடத்தப்படும் எனவும் ஓ.பன்னீா்செல்வம் அறிவித்துள்ளாா். அதிமுக பெயரைப் பயன்படுத்துவது தொடா்பாக, நீதிமன்ற வழக்குகளும் தீா்ப்புகளும் இருப்பதால் அதனைத் தவிா்த்து விட்டு ‘அதிமுக தொண்டா்கள் உரிமை மீட்புக் குழு’ என்ற பெயா் தாங்கிய அறிக்கையை ஓ.பன்னீா்செல்வம் சனிக்கிழமை வெளியிட்டாா்.